Home இலங்கை காலிமுகத் திடலில் குவிக்கப்பட்ட காவற்துறை வாகனங்கள் அகற்றப்பட்டன!

காலிமுகத் திடலில் குவிக்கப்பட்ட காவற்துறை வாகனங்கள் அகற்றப்பட்டன!

by admin

அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள காலி முகத்திடல் போராட்ட இடத்தில் திடீரென காவற்துறை டிரக் வண்டிகள் குவிக்கப்பட்டன.

இந்த ட்ரக் வண்டிகள் எதற்காக நிறுத்தப்பட்டன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

எனினும், ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டது.

“இலங்கை மக்களின் அமைதியான போராட்டத்தை எந்த வகையிலும் சீர்குலைக்கும் எந்த முயற்சியை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. அத்தகைய முயற்சியானது நாடு, அதன் ஜனநாயகம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், ” என்று அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More