இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையின் கடன் தரப்படுத்தல் Caa2 என்பதிலிருந்து Ca எனும் நிலைக்கு மதிப்பிறக்கம்!

இலங்கையின் கடன் தரப்படுத்தலை Caa2 என்பதிலிருந்து Ca எனும் நிலைக்கு மதிப்பிறக்கம் செய்துள்ளதாக சர்வதேச தரப்படுத்தல் அமைப்புகளில் ஒன்றான மூடிஸ் இன்வெஸ்ட்டர் சேர்விஸ் (Moody’s) அறிவித்துள்ளது.

இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்தாமல் இருப்பது தொடர்பில் கடந்த வாரம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்த தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

“நாட்டின் மிகவும் குறைந்த அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் மிகவும் வலுவிழந்த கடன் பெறும் நிலை ஆகியன தொடர்பில் நாட்டின் ஸ்தாபனங்களுக்கு கவனம் செலுத்துவதற்கு போதியளவு வழிகாட்டல்களை வழங்க முடியாத ஆளுகை கட்டமைப்பை பிரதிபலிப்பது” என்பது இந்த தரப்படுத்தல் குறிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

ஏற்கனவே சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான S&P Global Ratings இனால் இலங்கையின் அந்நியச் செலாவணி தரப்படுத்தல் “CCC” இலிருந்து “CC”க்கு குறைக்கப்பட்டது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் வெளியக கடன் மீளச் செலுத்தும் அழுத்தங்கள் போன்ற காரணிகளை கவனத்தில் கொண்டு இந்தத் தரப்படுத்தலை வழங்கியுள்ளது.

இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் மீள் கட்டமைப்பு சிக்கல்கள் நிறைந்ததாக அமைந்திருக்கும் என்பதுடன், அதனைப் பூர்த்தி செய்வதற்கு சில மாதங்கள் வரை செல்லலாம் என தரப்படுத்தல் முகவர் அமைப்பு கடந்த 13.04.22 வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.