Home இலங்கைவீடுடைத்து கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது

வீடுடைத்து கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது

by admin

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த வீட்டினுள் புகுந்த இருவர் அங்கிருந்தோரை எழுப்பி அடித்துக் காயப்படுத்தி அச்சுறுத்தி மூன்றரைப் பவுண் நகைகளை கொள்ளையடித்துத் தப்பித்தனர்.சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.அதனடிப்படையில்காவல்துறையினரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஏழாலை குப்பிளானைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடைய சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட நகைகளை சுன்னாகத்தில் அடகு வைத்த நிலையில் காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More