Home இலங்கைவீதியில் மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

வீதியில் மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா்.
துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

 
குறித்த சிறுவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் , வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளாா். 
அதனை அவதானித்தவர்கள் சிறுவனை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் , சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டாா் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.  உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More