Home இலங்கைஇந்தியா செல்ல முயன்ற திருகோணமலையை சோ்ந்த 12 பேர் கைது :

இந்தியா செல்ல முயன்ற திருகோணமலையை சோ்ந்த 12 பேர் கைது :

by admin



மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையை 7 சிறுவர்கள் ,3 பெண்கள் ,2 ஆண்கள் உள்ளடங்களாக சேர்ந்த 3 குடும்பம் 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று காலை 5 மணியளவில் மன்னார் காவல்துறையினாிடம் ஒப்படைக்கப்பட்டதனையடுத்து அவா்களை மன்னார் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்களாக 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More