Home இலங்கைவழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

by admin

இளவாலை காவல்துறைப் பிரிவில் வீதியில் செல்வோரிடம் தங்க நகைகளை அபகரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் வீடொன்றில் ஒளிந்திருந்த போது இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர் என்று இளவாலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டனர். பெரிய விளான், வடலியடைப்பு பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைகளுடன் சந்தேக நபர்களுக்கு தொடர்பு என்று காவல்துறையினர் கூறினர்.

சந்தேக நபர்களினால் கொள்ளையிட்ட நகைகள் அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இளவாலை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் தம்மிக்க பத்மராஜ் தலைமையிலான குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More