164
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
“அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கைகளை அழித்து அக்கிரமத்தில் ஆட்சி செய்கின்ற அரசே மக்கள் அபிப்பிராயத்துக்கு தலைவணங்கு” எனக்கோரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக காலை 9 மணியளவில் ஒன்றுகூடிய வைத்தியர்கள், பணியாளர்கள், ஊழியர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
Spread the love