185
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் வன்முறைகளை கருத்திற் கொண்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மே 17ஆம் திகதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றும் இன்றும் நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து அமைச்சரவையும் செயலிழந்துள்ளது. இந்த நிலையில் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love