Home இலங்கைகோட்டாகோகம போராட்டகாரரா்களுக்கு விசேட அறிவிப்பு

கோட்டாகோகம போராட்டகாரரா்களுக்கு விசேட அறிவிப்பு

by admin

காலிமுகத்திடல் , கோட்டாகோகமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காவல்துறையினா் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.

காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றநிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினா் போராட்டக்காரர்களுக்கு இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்..

மே மாதம் 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மே மாதம் 9 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவித்த காவல்துறையினா் அவ்வாறு பொதுமக்கள் ஒன்றுகூடுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சாித்துள்ளனா்.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியை தவிர, வீதிகள், புகையிரதபாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் தங்குவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை எனவும் இதன்போது காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More