ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (13) எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இதன்போது தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.
இதேவேளை வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை நியமிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தொிவித்துள்ள அவா் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார்.