Home இலங்கைரணிலின் கரங்களை பலப்படுத்த விக்கி இணக்கம்!

ரணிலின் கரங்களை பலப்படுத்த விக்கி இணக்கம்!

by admin

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.

“எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். இந்நிலையில், நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளேன்” என்று விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன், ரணில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More