Home இலங்கைஊரடங்கு உத்தரவு நேரம் திருத்தப்பட்டுள்ளது…

ஊரடங்கு உத்தரவு நேரம் திருத்தப்பட்டுள்ளது…

by admin

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க, நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 11.00 மணி முதல், நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தொிவித்துள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஊரடங்குச்சட்டம் இன்று (16) இரவு 8 மணிமுதல் நாளை (17 )அதிகாலை 5 மணி வரையில் அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு


May 16, 2022 10:03 am

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நேற்று (15) முழுமையாக தளர்த்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று (16) இரவு 8 மணிமுதல் நாளை (17 )அதிகாலை 5 மணி வரையில் அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More