Home இலங்கைஇலங்கைக்கு இரண்டாம் கட்டமாக நிதியுதவி வழங்கியுள்ள யாசகர்!

இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக நிதியுதவி வழங்கியுள்ள யாசகர்!

by admin

இலங்கை வாழ்  தமிழர்களுக்கு  தன்னால் ஆன உதவி செய்ய வேண்டும் என மக்களிடம் யாசகமாக பெற்ற 10ஆயிரம் இந்திய ரூபாயினை  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கியுள்ளார். 


குறித்த யாசகர் இதற்கு முன்னரும், இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 50,000 வழங்கிய நிலையில் இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளரிடம் 10 ஆயிரம் வழங்கியுள்ளார். 

இலங்கை வாழ்  தமிழர்களுக்கு  எம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறை சேர்ந்த  யாசகர் பூல்பாண்டி பொதுமக்களிடம்  யாசகமாக 10 ஆயிரம் இந்திய ரூபாய்களை பெற்று இருந்தார். 


அதனை இன்றைய தினம் திங்கட்கிழமை  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பூல்பாண்டி மாவட்ட ஆட்சியர் விசாகனை நேரில் சந்தித்து தான் யாசகமாக பெற்ற பணத்தினை  இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக வழங்கினார். 

இதேபோல் கொரோனா காலத்திலும் பொது மக்களிடம் யாசகம் பெற்று தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More