Home இலங்கையாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் மீது மற்றுமொரு வன்முறை கும்பல் வாள் வெட்டு

யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் மீது மற்றுமொரு வன்முறை கும்பல் வாள் வெட்டு

by admin

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 
அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

குறித்த நபர் “அளவெட்டி கனி” என அழைக்கப்படுபவர் என்றும் , குறித்த நபர் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
அதேவேளை குறித்த நபர் “வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு வந்த போது , மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவே  வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More