கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, மே மாதம் 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதன்கிழமை (01.06.22) முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, ரோஹித்த அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கும் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை, காவற்துறை மா அதிபர் மற்றும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரையும் வியாழக்கிழமை (02.06.22) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.