Home இலங்கைஇலங்கையின் பொருளாதார நெருக்கடி மிருகங்களையும் விட்டு வைக்கவில்லை!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிருகங்களையும் விட்டு வைக்கவில்லை!

by admin

நிதி நெருக்கடி காரணமாக, தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வனஜீவிகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வனஜீவிகள் திணைக்களத்தில் நேற்று (31.05.22) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களினால், மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More