141
யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியோரமாக இருந்த வேலியுடன் மோதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love