Home இலங்கைரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராய்வு!

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராய்வு!

by admin

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More