Home இலங்கைசுப்பர் மடத்தில் பலப்பரீட்சை – ஐவர் காயம்!

சுப்பர் மடத்தில் பலப்பரீட்சை – ஐவர் காயம்!

by admin

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கொட்டடியை சேர்ந்த சிறிமுருகன் சிறிஅஜன் (வயது- 23) , வியாபாரிமூலையை சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது-30) , சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது- 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39) மற்றும் தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது- 41) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

கடற்தொழிலில் ஏற்பட்ட முரண்பாடே மோதலாக மாறியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , தாம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பருத்தித்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More