Home இலங்கைவடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் உயிரிழப்பு.

வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் உயிரிழப்பு.

by admin


வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் செலுத்திக் கொண்டிருந்த மாணவனிற்க்கு முன்னால் மாடு ஒன்று குறுக்காக சென்றதாகவும் ,இதனால் பதட்டமைந்த மாணவன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாகவே காயமடைந்த மாணவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மருத்துவ மனையில் மரணமடைந்துள்ளதாகவும். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகலை நெல்லியடி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


சடலம் தற்போது உரிய விசாரணைகளுக்காகவும், உடற்கூற்று பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி காவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.ல்

குறித்த விபத்து சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணமடைந்துள்ளான்.

குறித்த நபர் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More