Home இந்தியாஸ்ராலினை சந்தித்தார் மிலிந்த!

ஸ்ராலினை சந்தித்தார் மிலிந்த!

by admin

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் விடயங்களை பரிமாறிக்கொள்ள உரிய பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு இதன்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், தமிழ் தத்துவவியலாளரும் புலவருமான திருவள்ளுவரின் சிலையொன்றை இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை மிலிந்த மொரகொட ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சருக்கு இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டிருந்த நிகழ்வொன்றில் அண்மையில் கூறிய பின்புலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More