
8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 65வது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்கொண்டாட்டங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது
யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ்,வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம்,யாழ் மாநகரசபை முதல்வர்வி. மணிவண்ணன்,ஆணையாளர் ஆர்.ஜெயசீலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் யாழ்ப்பாண வலய கல்விப் பணிப்பாளர் , மற்றும் யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்
மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பமாகிய 8 வதுசர்வதேச யோகா தின நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ் இந்திய துணைத்தூதுவரின் வரவேற்புரை இடம்பெற்ற தோடு யோகா பயிற்சியும் இடம்பெற்றது நிகழ்வின் இறுதியில் யோகா பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Add Comment