இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26.06.22) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாயாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாயாகும்.
லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாயாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளன.
ரயில் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை
ரயில் கட்டணங்களை 50 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்கள பேச்சாளரும் பிரதிப் போக்குவரத்து அதிகாரியுமான காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
ஓட்டோ கட்டணமும் அதிகரிப்பு
எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, ஓட்டோ கட்டணங்களையும் இன்று (26.06.22) முதல் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை ஓட்டோ சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம் ஓட்டோ கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்கும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.