Home இலங்கை“பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது”

“பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது”

by admin

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க,

“பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைபக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி.

விமானம் ஓடாத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம், கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகிறது.

இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி. தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More