Home இலங்கைகைதி உயிரிழப்பு – பாதுகாப்புதரப்பு நால்வா் கைது

கைதி உயிரிழப்பு – பாதுகாப்புதரப்பு நால்வா் கைது

by admin

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி இரவு கைதி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியதனையடுத்து கடந்த 29ஆம் திகதி காலை சுமார் 600 கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் இரண்டு பிரதான கதவுகளையும் உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒரு பகுதியினா் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய ஏனைய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக இராணுவமும் காவல்துறையினரும் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More