Home இலங்கை300 லீற்றர் டீசல் வைத்திருந்தவர் கைது

300 லீற்றர் டீசல் வைத்திருந்தவர் கைது

by admin

யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினா் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,


 யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது 300லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு குறித்த டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்தனர்.-

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More