காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.