Home இலங்கை ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்!

ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்!

by admin

பிரதமரின் வீட்டின் அருகில், News first ஊடகவியலாளர்கள் நால்வர் மீது பாதுகாப்புத் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் ஏனைய ஊடகவியலாளர்களும் இருந்த போதும் மேற்படி ஊடகவியலாளர்களைத் தேடி சென்று தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. இதில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவற்துறையினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் பதற்ற நிலை நிலவுவதாகவும் மீண்டும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை நோக்கி போராட்டக்காரர்கள் படையெடுத்துள்ளனர்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் நடத்தியமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More