
ஸ்பெயின் நாட்டில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த கோடை காலத்தில் கடந்த ஜூன் மாதம் 11ந்ம் திகதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப அலை வீசியது.
40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவானதால் இதில் சிக்கி 829 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில் தற்போது அங்கு 2வது கோடை வெப்பஅலை வீசி வருகிறது.
ஜூலை 10ம் திகதி துமல் 19ம் திகதி வரை பதிவான வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1047 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் சுவாச கோளாறு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உயிரிழந்தாகவும் ஸ்பெயின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பீ ஹெர்வெல்லா தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment