Home இலங்கையாழ். பல்கலையில் கறுப்பு ஜீலை நினைவேந்தல்

யாழ். பல்கலையில் கறுப்பு ஜீலை நினைவேந்தல்

by admin

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள தூபியில் கறுப்பு ஜீலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ்  பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு  அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.


இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் 1983 கறுப்பு ஜீலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More