164
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பெறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம பகுதியில் தாக்கப்பட்டனர்.
தாக்குதல் சம்பவத்தை மிகவும் வன்மையாக கண்டித்தும், தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Spread the love