Home இலங்கைஅரியாலையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விழிப்புணர்வு பதாகை

அரியாலையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விழிப்புணர்வு பதாகை

by admin

யாழ்ப்பாணம் ,அரியாலை, நெடுங்குளம் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் முகமாக பாதுகாப்பற்ற புகையிரத கடவை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,  “விபத்து விழிப்புணர்வு” பதாகையை யாழ் மாநகர சபை அனுமதியுடன்  யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழகம் அப்பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளது. 

இந்த விழிப்புணர்வுப் பதாகையானது  பழைய விபத்து புகைப்படங்களுடன் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. 

 இச்செயற்திட்டத்தினை  யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர உறுப்பினர் திரு.பார்த்தீபன் ஆகியோருடன் யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழக உறுப்பினர்களும் நேரில் சென்று பார்வையிட்டனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More