
25 கிலோ பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது.
இன்று அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து கடற்கரையில் இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் குறித்த மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.
சுமார் 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய குறித்த மீன் தூண்டிலில் சிக்குண்டு கடலில் அட்டகாசம் காட்டியதுடன் இளைஞர்கள் குறித்த மீனை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வருவதற்கு பெரும் சிரமங்களை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் அம்பாறை மாவட்ட கடற்கரையில் பருவ மாற்றம் காரணமாக அதிகளவில் மழை பெய்து வருவதுடன் சில முகத்துவாரங்களும் வெட்டப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பொழுதுபோக்கிற்கான சிலர் தூண்டில் மூலம் அப்பகுதியில் மீன்களை பிடித்து வருவதனை காண முடிகின்றது.


Spread the love
Add Comment