இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெறும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை முதலாவது வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுள்ளது. ஆண்களுக்கான எப்42-44/61-64 தட்டெறிதல் பரா போட்டியில் இலங்கை வீரரான பாலித ஹல்கஹவெல கெதர வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதேவேளை ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேயக்கோன் எனும் இலரங்கை வீரா் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 10.14 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து அவா் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்