இலங்கை பிரதான செய்திகள்

கசிப்புக் குகை சுற்றிவளைப்பு 

கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 340 லீற்றர் (2 பரல்)கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர் 

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான காவல்துறைப் பரிசோதகர் பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்  உபகாவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணியினரால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.