156
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் புதன்கிழமை(10)மன்னார் காவல்துறை ஊடாக குறித்த அழைப்புக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
-எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த பெப்பிரவரி மாதம் 18 ஆம் திகதியும் த வி.எஸ்.சிவகரன் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love