எகிப்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்ளடங்கலாக குறைந்தது 41 போ் உயிரிழந்துள்ளனா். சுமார் 5,000 பேர் வரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீ விபத்து காரணமாக தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலில் மறிக்கப்பட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.