Home இலங்கையுவான்வாங்-5ஐ விஞ்சிய டோனியர் – 228!

யுவான்வாங்-5ஐ விஞ்சிய டோனியர் – 228!

by admin

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்தது.

இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுவது முக்கியமான ராஜதந்திர செய்தியாக பார்க்கப்படுகிறது.

தரையிறங்கிய விமானத்தை நீர் தாரைப் பிரையோகம் செய்து வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இதனூடாக சினக் கப்பலால் எற்பட்ட சர்ச்சைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க முடிவைக் கண்டிருப்பதாக கருதப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More