169
போராட்டங்கள் ஊடாக ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டை நெருக்கடி நிலைமைக்குள் தள்ளியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும், ஊழல் குற்றச்சாட்டு கொண்டவர்களை அமைச்சர்களாக நியமிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.
புதிய நடைமுறைகளுக்குப் பதிலாக ஜனாதிபதி ரணில் பழைய நடைமுறைகளையே தொடர்வதாகவும், முன்னாள் அமைச்சர்கள், நண்பர்கள், உறவினர்களின் ஆதரவுடன் சுயநலம், மனிதாபிமானமற்ற அரசியலை தொடர்ந்து ரணில் முன்னெடுப்பதாகவும் குற்றஞ்சுமத்தினார்.
Spread the love