ரசிகரின் கைபேசியை உடைத்தமை தொடர்பாக மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தியுள்ளனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த மார்ச் 9-ம் திகதி எவர்டன் அணியுடன் நடைபெற்ற போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
போட்டி முடிவடைந்ததும் மன்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டவீரர்கள் மைதானத்தில் இருந்துதிரும்பி வந்து கொண்டிருந்த போது 14 வயது சிறுவன் ஒருவா் தனது கைபேசியில் வீரர்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாா் . இதனைப்பார்த்த ரொனால்டோ சிறுவனின் கையை பலமாக தட்டிவிட்டார். இதில் கைபேசி கீழே விழுந்து உடைந்தது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ரொனால்டோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் மன்செஸ்டர் அணி விளையாடும் அடுத்த போட்டியை நேரில் காண சிறுவனுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மெர்சிசைட் காவல்துறையினா் , கிறிஸ்டியானோ ரொனால்டோவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளதுடன் அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனா்.