Home இலங்கைபளை‌யில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

பளை‌யில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

by admin

பளை‌ காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று (18) வியாழக்கிழமை வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நபர் ஒருவரது வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை காவல்துறையினயிருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 910கிராம் வெடிமருந்து, கழற்றிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டும் நல்ல நிலையில் மூன்று மோட்டார் குண்டுகளள் என கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ள பளை காவல்துறையினா் இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More