Home இலங்கை திருகோணமலையில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூவா் பலி

திருகோணமலையில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூவா் பலி

by admin

திருகோணமலை – மூதூர், பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். மூதூர் பாச்சனூர் 64 ஆவது கட்டைப் பகுதியில் அமைந்துள்ள கொட்டியாரம் ரஜமஹா விகாரையில் சிரமதான நிகழ்விற்காக சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பட்டுள்ளது. .

இன்று இடம்பெற்ற இந்த விபத்தின் போது உழவு இயந்திரத்தில் 21 பேர் பயணித்துள்ளதாகவும் பத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் தொடிிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தோரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் மூதூர் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More