Home இலங்கை வசந்த முதலிகே உள்ளிட்டவா்களின் விசாரணைகள் CIDயிடம் ஒப்படைப்பு

வசந்த முதலிகே உள்ளிட்டவா்களின் விசாரணைகள் CIDயிடம் ஒப்படைப்பு

by admin

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவா் வசந்த முதலிகே மற்றும் ஏனைய இருவர் தொடர்பிலான விசாரணைகள் காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அரச விரோத நடவடிக்கைகளில் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே, குணதிலக்க சிறிவர்தனலாகே ஹஷான் ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை மேலும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருப்பதால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரங்களுக்கு அமைய தடுப்புக் காவலில் வைக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக காவல்துறையினா் வெளியட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதன்படி, வசந்த முதலிகே மற்றும் ஏனைய இருவரும் மேலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More