Home இலங்கை பாறையிலிருந்து தவறி வீழ்ந்து உதவி விரிவுரையாளர் உயிாிழப்பு

பாறையிலிருந்து தவறி வீழ்ந்து உதவி விரிவுரையாளர் உயிாிழப்பு

by admin

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன், மாவனெல்ல, உதுவம்கந்த பாறையிலில் ஏறிய போது, 300 அடி உயரமான பாறையில் இருந்து தவறி வீழ்ந்து பேராதனை பல்கலைக்கழக  விவசாய பீடத்தின் இளம் உதவி விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த விரஸ்மி கொடிதுவக்கு என்ற 27 வயதுடைய இளம் உதவி விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் 58 பேரைக் கொண்ட குழுவுடன் ஆய்வொன்றுக்காக உதுவம்கந்த பகுதிக்கு சென்றிருந்த அவர் இன்று (21) பிற்பகல் பாறையிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More