Home இலங்கைபொன்னாலைப்பால விபத்து – கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழப்பு

பொன்னாலைப்பால விபத்து – கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழப்பு

by admin

மோட்டார் சைக்கிளில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஜெயந்தன் தேவப்பிரியா (வயது 23) என்றே பெண்ணே உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் கர்ப்பமாக உள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக காரைநகரில் இருந்து மூளாய் வைத்திய சாலைக்கு மோட்டார் சைக்கிளில் கணவனால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், குறித்த பெண் பொன்னாலை பாலத்தடியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More