Home இலங்கைதனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 8 இலங்கை தமிழர்கள்

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 8 இலங்கை தமிழர்கள்

by admin

இலங்கையில் இருந்து படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 8 பேரை மீட்ட மரைன் காவல்துறையினப் அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.

தனுஷ்கோடி அடுத்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை(27) காலை அங்கு சென்ற மரைன் காவல்துறையினா் அவா்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி மற்றும் அவரது மூன்று குழந்தைகள்,தலைமன்னாரை நேர்ந்த சசிகுமார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மன்னாரை சேர்ந்த 65 வயதான இந்துமதி என மொத்தமாக 8 பேர் நேற்று (26)  இரவு ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று (27) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கியது தெரியவந்தது.

தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், அதிகாலை முதல் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில் மரைன் காவல்துறையினா் உரிய நேரத்தில் வந்து தங்களை மீட்டதாக அவா்கள் தொிவித்துள்ளனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 157 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More