265
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் இ.நா.ஸ்ரீஞானேஸ்வரன் எழுதிய “பன்னாட்டுக் குற்றங்கள்” எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.
செ.விந்தன் புத்தகத்தை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை நாகமணி இராமநாதன் பெற்றுக்கொண்டார்.
புத்தகத்திற்கான மதிப்பாய்வை யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல்த் துறைத் தலைவரும் பேராசிரியருமான கே.ரி.கணேசலிங்கம் மேற்கொண்டார்.
Spread the love