Home உலகம்சோவியத் யூனியனின் இறுதித் தலைவர் காலமானார் :

சோவியத் யூனியனின் இறுதித் தலைவர் காலமானார் :

by admin

மிக்கைல் செர்கேவிச் கொர்பச்சோவ் (Mikhail Sergeyevich Gorbachev) தனது 91 ஆவது வயதில் காலமானார். சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய அரசியல்வாதியான இவா் இவர் சோவியத் யூனியனின் இறுதித் தலைவராவார்.

1985 முதல் 1991 வரை சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த இவா் 1988 முதல் 1991 வரை ஜனாதிபதியாகவும், 1988 முதல் 1989 வரை சுப்ரீம் சோவியத் தலைமைப் பீடத்தின் தலைவராகவும், 1989 முதல் 1990 வரை சுப்ரீம் சோவியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

கருத்தியல் ரீதியாக, கொர்பச்சோவ் தொடக்கத்தில் மார்க்சியம் – லெனினிசக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், பின்னர் 1990 களின் முற்பகுதியில் சமூக ஜனநாயகத்தை நோக்கிச் சென்றார்.

இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன எனக் கூறப்படுகிறது. இவருக்கு 1990 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More