Home இலங்கையாழ்.நகர் மத்தியில் வீதியில் பாரிய குழி – அறிவித்தல் இல்லாதமையால் விபத்துக்கள் ஏற்பட ஏது நிலை

யாழ்.நகர் மத்தியில் வீதியில் பாரிய குழி – அறிவித்தல் இல்லாதமையால் விபத்துக்கள் ஏற்பட ஏது நிலை

by admin

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பாரிய குழி ஒன்று வீதியில் காணப்படுகிறது. அதனால் பேருந்துகள் பயணிப்பதில் சிரமங்கள் காணப்படுவதுடன் , வீதியில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன. 

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக ஞான வைரவர் ஆலய வீதியில் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் மூடி சேதமடைந்து பாரிய குழி ஏற்பட்டுள்ளது. 

குறித்த வீதி ஊடாக தனியார் பேருந்துகள் அதிகளவில் பயணிக்கின்றன. வீதியின் நடுவில் குழி காணப்படுவதால் , வீதியோரமாக சிரமங்களுக்கு மத்தியில் பேருந்தினை செலுத்தி செல்கின்றனர். அதனால் அவ்விடத்தில் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன. 

வீதியின் நடுவில் பாரிய குழி காணப்படுகின்ற போதிலும் , அது தொடர்பிலான அறிவுறுத்தல் பலகைகள் அவ்விடத்தில் வைக்கப்படாமையால் , இரவு வேளைகளில் குழியினை அவதானிக்காது அவ்விடத்தில் விபத்துக்கள் இடம்பெற கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு எனவும் , எனவே அது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வீதியினை திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More