இலங்கையின் பிரபல நடிகை தமித்தா அபேரத்ன பத்தரமுல்லையில் உள்ள தியத்த உயனவிற்கு அருகே இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் விசேட காவல்துறைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்தமை மற்றும் சட்டவிரோத ஒன்றுகூடல்களில் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.